மனதின் மூலையில் ஏதோ ஒரு இனம் காண முடியாத நினைவு ஒன்று வருடக் கணக்காக ஒளிந்து கொண்டு, ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது. யாரிடமும் சொல்லாமல், தெளிவாக அதைப் பற்றி சிந்திக்கக்கூட இல்லாமல், நடக்குமோ நடக்காதோ என்ற ஒரு ஏக்கத்துடன் உள்ளுக்குள்ளே உட்கார்ந்திருக்கிறது ஓர் இல்லம். மருகி, தவித்து, வாழ்க்கைத் துணையுடன் சண்டையிட்டு, கைமீறி கடன் வாங்கியும் வாங்காமலும், நினைவில் நின்ற வீடு கண் முன் நிஜமாகி, அந்த நிஜத்தில் கரைந்து போகும் வாழ்வு எல்லோருக்கும் அமையாது.
தலைக்கு மேல் சொந்தமாக ஒரு கூரை வேண்டும் என்ற அடிப்படைத் தேவையை மிஞ்சி, தலைக்கு மேல் இப்படிப்பட்ட ஒரு கூரை வேண்டும் என்று கனவு காணும் மனிதன், தன் கனவின் நனவாக உருவாக்கிய வீடுகள் இவை.
Write a comment ...