அசோகமித்திரனும் American Fiction-ம்
Cord Jefferson என்ற அமெரிக்க இயக்குனரின் முதல் திரைப்படமாக 2023ல் வெளிவந்து ஏகப்பட்ட அவார்டுகளையும் பரிசுகளையும் வென்ற American Fiction திரைப்படம் ‘Thelonius “Monk” Ellison’ என்ற ஒரு அமெரிக்க கறுப்பின பேராசிரியர்/எழுத்தாளரைப் பற்றியது. Percival Everett என்ற அமெரிக்க எழுத்தாளரின் 2001ல் வெளிவந்த ‘Erasure’ என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கறுப்பினத்தவர்களைப் பற்றிய வெளியுலக (அமெரிக்க) பார்வையைப் பற்றியது என்று பொதுவாகக் கூறிவிடலாம். ‘Thelonius “Monk” Ellison’ என்ற லாஸ் ஏஞ்சல்ஸ் பேராசிரியர் மிகுந்த மேதமை வாய்ந்த ஆராய்ச்சி புத்தகங்களை எழுதி வெளியிடுகிறார். கிரேக்க புராணங்களையும் இலக்கிய கோட்பாடுகளையும் குறிப்பிட்டு அவர் எழுதும் புத்தகங்களை வாங்குவோரும் வாசிப்போரும் இல்லாமல் போகவே மிகுந்த வேதனையும் விரக்தியும் அடைகிறார். இந்த சமயத்தில் Sintara Golden என்ற அமெரிக்க கறுப்பின பெண் எழுத்தாளரின் 'We's Lives in Da Ghetto' என்ற, கறுப்பினத்தவரின் வாழும் முறை என்று பொத்தாம் பொதுவாகக் கருதப்படும் cliché க்களை அவர்களால் பேசப்படும் மொழி என்று கருத்தப்படும் இலக்கணமேயில்லாத கொச்சை ஆங்கிலத்தில் வெளிபடுத்தும் இந்த நாவல் எக்கச்சக்கமாய் விற்று தீர்த்து வாசகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட, வெறுப்பின் உச்சத்தில் அதே போல் தானும் ஒரு நாவலை எழுதுகிறார்.
Write a comment ...