ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - II
ஷெர்லக் ஹோம்ஸ் ஒரு நெடிய விசில் சத்தத்துடன் நிமிர்ந்து அமர்ந்தார். "ஓய், பீட்டர்சன்! உன் கையில் என்ன இருக்கிறதென்று தெரியுமா? பொக்கிஷமய்யா, பொக்கிஷம்!" என்றார் ஹோம்ஸ்.
ஷெர்லக் ஹோம்ஸ் ஒரு நெடிய விசில் சத்தத்துடன் நிமிர்ந்து அமர்ந்தார். "ஓய், பீட்டர்சன்! உன் கையில் என்ன இருக்கிறதென்று தெரியுமா? பொக்கிஷமய்யா, பொக்கிஷம்!" என்றார் ஹோம்ஸ்.
கிறிஸ்துமஸிற்கு இரண்டு நாட்கள் கழித்து ஷெர்லக் ஹோம்ஸைப் பார்த்து அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றிருந்தேன். ஊதா நிற டிரெஸ்ஸிங் கவுன் ஒன்றை அணிந்தவாறு சோபாவில் சாய்ந்திருந்தார். அவர் கை எட்டும் தூரத்தில் அவருடைய பைப்புகளும் அவரைச் சுற்றி அவர் வாசித்து முடித்திருந்த அன்றைய காலை செய்தித்தாள்களும் இறைந்து கிடந்தன. சோபாவின் அருகில் இருந்த மர நாற்காலியின் முதுகுப் பகுதியில், பல இடங்களில் விரிசல் விட்டிருந்த பழைய தொப்பி ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அந்தத் தொப்பி அவரின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்ததை நாற்காலியின் மேல் இருந்த பூதக்கண்ணாடியும் ஃபோர்செப்ஸும் தெரியப்படுத்தின.
‘மச்சிவர்ல புத்தா’ (Machiwarla Budha) என்ற Gopal Nilkanth Dandekarரின் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட மராத்தித் திரைப்படத்தின் இசையமைப்பாளர் Dhananjay Dhumal. இந்தப் படத்தின் இயக்குநர் Vijaydatta இவரிடம் படத்திற்கு இசையாக பறவைகளின் சப்தங்கள் மட்டுமே வேண்டும் என்று கேட்டார். கதையின் களம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராஜ்மாச்சி என்ற இடம். நகரிலிருந்து அதன் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையுடன் சேர்ந்து வரும் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தன் சொந்த ஊரான ராஜ்மாச்சிக்குப் புலம் பெயர்கிறார் மச்சிவர்ல புத்தா. மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலையின் உச்சியில் குடிசையிட்டுக் குடியமர்கிறார் அவர். இயற்கையை அவர் கண்டும் கேட்டும் உணரும் தருணங்களைக் குறிக்க இப்படி ஒரு இசை வேண்டும் என்று நினைத்து இயக்குநர் இசையமைப்பாளரிடம் கேட்க அவர் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் அலைந்து திரிந்து பறவைகளின் சப்தங்களைப் பதிவு செய்துகொண்டு வருகிறார். அந்த சப்தங்களை தாளக்கட்டுடன் ஒரு கோர்வையாக்கி பாடலாக்கிவிட்டார். மனிதக் குரல்களோ இசைக்கருவிகளோ எதுவும் இன்றி கட்டமைக்கப்பட்ட இந்தப் பாடலுக்கு இந்த ஒரு சிறிய அறிமுகம் தவிர வேறு எந்த விளக்கங்களும் தேவையில்லை என்றுத் தோன்றுகிறது.
'விக்ரம்' திரைப்படத்தைத் தற்போது தான் தியேட்டரில் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது (ஐந்து வருடங்கள் கழித்துத் திரையரங்கில் பார்க்கும் முதல் படம்). நீண்ட வருடங்களுக்குப் பிறகு (நான்கு வருடங்கள் என்று எதிலோ படித்த ஞாபகம்) கமல்ஹாசனைத் திரையில் பார்க்கும் வாய்ப்பைத் தமிழகம் மட்டுமல்ல, அவரின் உலகெங்கும் பரவியிருக்கும் ரசிகர்கள், கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள், இல்லை, இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படம் தொடங்கும் முன் கமல்ஹாசன் ரோபோ சங்கரின் கன்னத்தில் அழுந்த முத்தமிடும் ஒரு ஸ்லைடு போடப்பட்டது. தியேட்டர்களில் இன்னமும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் காட்சிகள் அனைத்தும் கமலுக்கு அவரின் ரசிகர்கள் அவரின் கன்னத்தில் அழுந்தக் கொடுக்கும் முத்தங்களே. இப்படி ஒரு கலைஞரை இப்படிக் கொண்டாடுவதுதான் நியாயம்.
நீங்கள் எதையும் தவறாக வாசித்துவிடவில்லை. 'வீடு தைக்கிறீங்களா?' என்று சரியாகத்தான் வாசித்திருக்கிறீர்கள். செங்கல், மணல், சிமிண்ட், கல், கான்க்ரீட், மண், மரம், உலோகம் என்ற மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் வீட்டைக் 'கட்டலாம்'. துணியைக் கொண்டு உருவாக்கப்படும் வீட்டை 'தைக்க'த் தானே வேண்டும்? அப்படித் 'தைக்கப்படும்' வீடுகளுக்குப் பெயர் 'யர்ட்' (yurt) அல்லது 'கெர்' (ger). ருஷ்யப் பெயரான 'யர்ட்' -ம் மங்கோலியப் பெயரான 'கெர்'- ம் குறிப்பது வேறெதுவுமில்லை, கூடாரத்தைத் தான்.
உலகின் மொத்த carbon dioxide வெளிப்பாட்டில் 39 சதவிகித பங்களிப்பும், உலகின் மொத்த எரிசக்தி உபயோகத்தில் 36 சதவிகித பங்கும் கொண்டு, சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் சீர்கேட்டிற்கும் பெரும் பங்காற்றுவது கட்டுமானத் துறை (construction industry) என்று World Green Building Council-ன் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்தும், தொலை தூரத்திலும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த பருவநிலை மாற்றமும் அதன் அச்சுறுத்தும் தாக்கங்களும், என்றோ, எங்கோ, எப்போதோ என்றில்லாமல் இன்று, இங்கு, இப்போது என்று மனிதகுலம் அவற்றை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது.
மனதின் மூலையில் ஏதோ ஒரு இனம் காண முடியாத நினைவு ஒன்று வருடக் கணக்காக ஒளிந்து கொண்டு, ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது. யாரிடமும் சொல்லாமல், தெளிவாக அதைப் பற்றி சிந்திக்கக்கூட இல்லாமல், நடக்குமோ நடக்காதோ என்ற ஒரு ஏக்கத்துடன் உள்ளுக்குள்ளே உட்கார்ந்திருக்கிறது ஓர் இல்லம். மருகி, தவித்து, வாழ்க்கைத் துணையுடன் சண்டையிட்டு, கைமீறி கடன் வாங்கியும் வாங்காமலும், நினைவில் நின்ற வீடு கண் முன் நிஜமாகி, அந்த நிஜத்தில் கரைந்து போகும் வாழ்வு எல்லோருக்கும் அமையாது.
செந்தலை குழுமம் @ myvikatan
"சமர்ப்பணம்உலகெங்கிலுமுள்ள வீடற்ற மக்களுக்கு"
செந்தலை குழுமம்@Myvikatan
தினமும் நான் கேட்காமலேயே வந்து விழும் கூகிள் நோட்டிபிகேஷன்களில் இன்று 'மாலையில் யாரோ' பாடலை ஒரு பெண் பாடும் You Tubeன் 'The Candlelight Studio' என்ற சானலின் காட்சி வந்து விழுந்திருந்தது. எப்போதும் இவைகளை சட்டை செய்யாமல் தள்ளி விடும் வழக்கம் இருந்தபோதிலும், அந்தப் பாடல் அதை க்ளிக்கச் செய்தது. இரவின் இருட்டில், ஒரே ஒரு மெழுவர்த்தியின் வெளிச்சத்தில் மாளவிகா சுந்தர் என்ற பெண் அந்தப் பாடலை எந்த இசையும் பின்னணியில் இல்லாமல் பாடினார். இரவின் இதங்களில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருக்கும் இடத்தை வேறு எதனாலும் நிரப்ப முடியாது என்பது சொல்லாமலேத் தெரியும் உண்மை. அதிலும் அவரின் மெலடிக்கு ஸ்வர்ணலதாவின் குரல் இழையும் வரிகள்... சொல்லவா வேண்டும்? மாளவிகாவின் குரலின் இனிமை நெஞ்சை வருடச் செய்வதாக இருந்தாலும், ஸ்வர்ணலதாவின் குரலில் கேட்ட அந்தப் பாடலை வேறு குரலில் கேட்பது ரொம்பவே நெருடத்தான் செய்தது. அத்தனை மெலடியிலும் அடிநாதமாக ஓடிடும் மென்சோகம் கொண்ட குரலில் கேட்ட ஸ்வர்ணலதாவின் பாடல்களை வேறு எந்தக் குரலாலும் ஈடு செய்யமுடியாது என்பதை மறுபடியும் நினைவூட்டிச் சென்றது மாளவிகாவின் ரெண்டிஷன்.
விகடனின் விளையாட்டு பகுதியில் வெளிவந்த CSK பற்றிய article.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அண்மையில் "parens patriae jurisdiction" என்ற ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு உத்தரவு/தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. உத்தரவின்/தீர்ப்பின் சாராம்சம் இதுதான்.
27/04/2022 தேதியிட்ட The New Indian Express –ன் இரண்டாம் தலையங்கம் ‘Behind Odisha’s Quack Problem’ வாசித்த போது, கிட்டத்தட்ட ஒரு மாதமாக மனதின் மூலையில் குறுகுறுத்துக் கொண்டிருந்த கேள்வி ஒன்றிற்கு விடை கிடைத்த ஏமாற்றம் ஒன்று கவிழ்ந்தது.
மகளிர் டென்னிஸ் உலகத்தின் நம்பர் 1 வீராங்கனை Ashleigh Barty தான் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தியை நான் அறிந்தது கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தாமதமாக. டென்னிஸ் ரசிகர்கள் உலகெங்கிலும் அதற்குள் அவர்களின் அதிர்ச்சியைப் பதிவு செய்து விட்டிருந்தார்கள். அதிர்ச்சி அலை அடித்து ஓய்ந்து இப்போது அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.
பதிவுகளின் இந்த நீண்ட இடைவேளைக்கு கோவிட் தொற்றிலிருந்து சில நாட்களுக்கு முன் மீண்டிருப்பது தான் காரணம். விரைவில் புதிய பதிவுகளுடன் இணைய முடியும் என்ற நம்பிக்கையில், ஒரு இடைப்பட்டப் பதிவாக இது.
முப்பத்தியொரு வயது, இரண்டு வெற்றிப் படங்களின் இயக்குநர் என்பது கொஞ்சம் யோசிக்க வைக்கக்கூடிய தகுதியாக இருக்கலாம் மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படத்தை இயக்க. ஆனால் இந்த இரண்டுடன், Basil Joseph படித்த engineering கல்வியும், சிறிது காலம் பார்த்த Infosys வேலை அனுபவமும் கலவையாக இணைந்து ‘மின்னல் முரளி’யின் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது என்றே நினைக்க வைக்கிறது.
Science Fiction, உளவியல், Magical Realism என்ற வெவ்வேறு தீம்களில் தனித் தனிக் கதைகளைக் கொண்ட சிறு கதை தொகுப்பு.
இன்னும்
முன்குறிப்பு: இது 'தேன்' திரைப்படத்தின் விமர்சனம் அல்ல.